புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2013

புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர்அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி, இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, அரசு போக்குவரத்து, மின்சாரம், ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மத்திய அரசு ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாக பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் புதிய பென்ஷன் திட் டத்தை கொண்டு வந்துள்ளது. இம்மசோ தாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக் கும் நடவடிக்கையை இக்கூட்டம் வன் மையாகக் கண்டிக்கிறது.இந்த புதிய பென்ஷன் திட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய - மாநில அரசு ஊழியர், அரசு சார்ந்த நிதி மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரியும் லட் சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படு வார்கள்.புதிய பென்ஷன் திட்டம் மூலம் உரிய பென்ஷன் கிடைப்பது அரிதாகிவிடும். ஊழியர்களின் பென்ஷன் சேமிப்பு நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வதின் மூலம் பென்ஷன் சேமிப்பு நிதிக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்.மத்திய அரசு புதிய பென்ஷன் திட் டத்தை முழுமையாகக் கைவிட கோரியும், பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு சார்ப்பில் ஆக. 23 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி யளவில் சென்னை அண்ணாசாலை, தாரா பூர் டவர் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பகுதி ஊழியர்களையும், தொழிலாளர் களையும், பெருமளவில் பங்கேற்க செய் வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி