சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: தமிழகத்தில் 300க்கும் அதிகமானோர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2013

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: தமிழகத்தில் 300க்கும் அதிகமானோர் தேர்ச்சி.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. இதில், தமிழகத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றனர்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட,24 பதவிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப, ஆண்டுதோறும்,யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய, மூன்று தேர்வுகளின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.முதல்நிலைத் தேர்வில், தேர்வு பெறுபவர்கள், பிரதான தேர்வுக்குச்செல்லலாம். இதில் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு செல்வர். பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேசிய அளவில், "ரேங்க்" பட்டியல் தயாரிக்கப்பட்டு, இறுதி பட்டியலை, யு.பி.எஸ்.சி., வெளியிடுகிறது.பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜொலிக்காமல் இருந்தனர். ஆனால், சென்னையில், தரமான பல்வேறு நிறுவனங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு, பயிற்சி அளித்து வருகின்றன.தமிழக அரசின், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் உட்பட, பல நிறுவனங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு, பயிற்சி அளித்து வருகின்றன. இந்நிறுவனங்களில் பயிற்சி பெறும் இளைஞர்கள், சமீப காலமாக, அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.நடப்பு ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு, கடந்த மே, 26ம் தேதி நடந்தது. 1,000 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இத்தேர்வை, நாடு முழுவதும், 9.8 லட்சம் பேர் எழுதினர்.தமிழகத்தில், 136 மையங்களில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, நேற்று முன்தினம் இரவு வெளியானது. தேர்வெழுதியவர்களில், 14,959 பேர், பிரதான தேர்வுக்கு, தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு, வரும் டிசம்பரில் நடக்கும் எனவும், நேர்முகத் தேர்வு, வரும், 2014மார்ச்சில் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, 300க்கும் மேற்பட்டோர், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி