அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு 300 மாணவர்களை சமாளிக்க ஒரே ஒரு ஆசிரியர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2013

அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு 300 மாணவர்களை சமாளிக்க ஒரே ஒரு ஆசிரியர்.

மதுரை மாவட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளது போல்,தமிழ் பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, தமிழாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில், 90க்கும்மேல் அரசு உயர் நிலை பள்ளிகள் உள்ளன. பல பள்ளிகளில் 200க்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர்.இதில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் நடத்த இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், 300 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில்கூட ஒரு தமிழாசிரியர் மட்டுமே உள்ளார். இதனால், தாய் மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்சுல் மிஸ்ரா கலெக்டராக இருந்தபோது, அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் மேற்பார்வையில், 15 கல்வி ஒன்றியங்களில் மூன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களிடையே தமிழ் பாடத்தில் "கல்வித்திறமை' குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில், 12,074 பேருக்கு உயிரெழுத்துக்களை கடைசி வரை வாசிக்க தெரியவில்லை. 27,556 பேர் பிழையாக வாசித்தனர்.14,053 பேருக்கு முழுவதுமாக எழுத தெரியவில்லை. 27,335 பேருக்கு வாக்கியம் அமைத்து எழுத தெரியவில்லை என கண்டறியப்பட்டது. ஆனால், இதற்கான தீர்வு குறித்து எந்த நடவடிக்கையும் கல்வி அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை. தமிழாசிரியர் கழக தலைவர் முனியாண்டி, செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறியதாவது:அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு தமிழாசிரியர் தேவைப்பட்டது. அப்போது, பணிநிரவல் அடிப்படையில், உயர் நிலைப்பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்களில் ஒருவரை பணிமாற்றம் செய்தனர். ஆனால், புதியஆசிரியர்கள் இதுவரை நியமிக்கவில்லை. பற்றாக்குறையால், உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்களை கொண்டு தமிழ் பாடம் எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, என்றனர். சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஏற்பட்டுள்ள சோதனை குறித்து, கல்வி அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி