முதல்வர் தகுதி பரிசு: "கட்-ஆப்" மதிப்பெண் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2013

முதல்வர் தகுதி பரிசு: "கட்-ஆப்" மதிப்பெண் வெளியீடு.

அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் வழங்கப்படும், முதல்வர் தகுதி பரிசுக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களில், முதல், 500 இடங்களை பெற்ற மாணவர்; முதல், 500 இட மாணவியருக்கு அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்.பட்டய மற்றும், பட்டப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 3,000 ரூபாய் வீதம், இவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்தாண்டு நடந்த, பிளல் 2, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான, "கட்-ஆப்&' மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. 1,167 மதிப்பெண் பெற்ற மாணவர்களும், 1,170 மதிப்பெண் பெற்ற மாணவியரும், பரிசு பெற விண்ணப்பிக்கலாம்.மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்று, கல்லூரி படிப்பதற்கான,"போனபைடு" சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன், அந்தந்த மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலரை, அணுக வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி