"இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக் கோரி, ஆசிரியர் தினமான, செப்., 5ல், மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.சங்கத்தின் அறிவிப்பு: சங்க செயற்குழு கூட்டம், 4ம் தேதி, நாமக்கல்லில் நடந்தது. ஊதிய குறைதீர் குழு அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை, மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்படும். முதலில்,வரும், 13ம் தேதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 5ம் தேதி முதல், கறுப்பு,"பேட்ஜ்' அணிந்து, பணிக்குச் செல்வது, ஆசிரியர் தினமான, செப்., 5ல், மாவட்ட அளவில், ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு, ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி