கருணாநிதி கருத்து ஆசிரியர்கள் சம்பள உயர்வு மகிழ்ச்சியல்ல; அதிர்ச்சியே - நாளிதழ் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2013

கருணாநிதி கருத்து ஆசிரியர்கள் சம்பள உயர்வு மகிழ்ச்சியல்ல; அதிர்ச்சியே - நாளிதழ் செய்தி

''அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கவில்லை. அதிர்ச்சி அளித்துள்ளது'' என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம்26ம் தேதி செய்தித்தாள்களில் ‘தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு: அரசு ஊழியர் சம்மேளனம் வரவேற்பு’ என்ற செய்தி வெளிவந்திருந்தது.மத்திய அரசின், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, திமுக ஆட்சியில்தான் 2009ம் ஆண்டு தமிழக அரசு அலுவலர்களுக்கு புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு முன்பே 1989ம்ஆண்டு திமுக அரசு 3வது முறையாக பதவியேற்ற போது, தமிழ்நாட்டில் முதல் முறையாக மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்களுக்கு திமுக அரசுதான் வழங்கியது.அதேபோல 1996ம் ஆண்டு திருத்தப்பட்ட மத்திய அரசின் ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்குபிறகுதான் 2006ல் திமுக ஆட்சியில், மத்திய அரசின் 6வதுஊதியக் குழுவின் பரிந்துரைகளையொட்டி 1.1.2006 முதலே முன் தேதியிட்டு, திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்கள், ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஒய்வு ஊதியம் வழங்கப்பட்டது.ஊதிய உயர்விலே ஒரு சில முரண்பாடுகள் இரப்பதாக அரசு அலுவலர் சங்கங்களின் சார்பில் என்னிடம் கோரிக்கை வைத்தபோது ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அவரின் பரிந்துரையின்பேரில் பல முரண்பாடுகள் திமுக ஆட்சியில் களையப்பட்டன. பின்னர் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மேலும் சில முரண்பாடுகள் இருப்பதாக சில அலுவலர் சங்கங்கள் கூறியதன் அடிப்படையில், அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைபடிதான் ஒரு சில அரசு அலுவலர்களுக்கு ஓரளவு ஊதிய விகிதம் உயர்த்தப்பட்டு, அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிரு க்கின்றன. இதைத்தான் அனைத்து நாளேடுகளும் வெளியிட்டு இருந்தன. அறிவிப்பையும், அரசாணைகளையும் முழுமையாக படித்துவிட்டு அடுத்தடுத்த நாள் ஏடுகளில் சிலர் கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் ஊதிய முரண்பாடுகளை களைய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள் ளது. 2011 சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்தபடி புதிய பென்ஷன்திட்டம் கைவிடப்பட்டு, பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி ஆணையாக வெளியிடப்படவில்லை.ஊதியக் குழு பற்றிய அரசு உத்தரவில் ஏமாற்றம் அடைந்த தமிழக ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் மூன்றுகட்டப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் இரவோடு இரவாக ‘எஸ்மா’ சட்டத்தின் கீழ் வீடுபுகுந்து போலீசாரால் கைது செய்யப்பட்டதையும், 1 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலை நீக்கம் செய்ததையும், திமுக ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கு வாரி வாரிவழங்கியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், திமுக ஆட்சிதான் அரசுஅலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொற்காலமாக இருந்தது என்பதையும் அரசு அலுவலர்களே நன்றாக அறிவார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மீன்பிடிக்க அனுமதி வேண்டும்இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தரவேண்டும் என்ற மீனவர்கள் கேட்டுள்ளனர். அந்த கோரிக்கையை அலட்சியப்படுத்திவிடாமல் மத்திய மாநில அரசுகள் அக்கறையுடன் ஆய்வு செய்து மீனவர்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. எப்போதோ 6 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த சம்பவம், தற்போது இரண்டொரு நாட்களுக்கிடையே அரங்கேறும் கொடுமையாக மாறிவிட்டது.கடந்த 2 மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் 10 முறை இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு இலங்கைக்கும், நாகைக்கும் இடையே சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டார்கள். அதன் பிறகு கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 74 மீனவர்களை, 10க்கும் மேற்பட்ட படகுகளுடன் இலங்கைக் கடற்படை சிறை பிடித்து, திரிகோணமலை கடற்படைப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். ஏற்கனவே கைதாகி அனுராதபுரம் சிறையில் 21 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.இந்த வரிசையில்தான் 3.8.13ல் ராமேஸ்வரம் மீனவர்கள் 20பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். மத்திய அரசும், மாநில அரசும் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு விரைவில் முடிவெடுத்துச் செய்தாலொழிய, நம்முடைய மீனவர்களின் துன்பங்கள் குறையப் போவதில்லை. மத்திய அமைச்சரிடம் முறையிட்டமீனவர்கள், தாங்கள் கடந்த 2 மாதங்களாக இந்தியக் கடல் பகுதியிலேயே மீன் பிடித்து வந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிகளில் மீன் வளம் குறைந்து விட்டதாகவும், இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளை அக்கறையோடு ஆராய்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

1 comment:

  1. 6th pay commision yaarudayula aatchiyil vanthathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி