தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின், தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக, பேராசிரியர், மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2013

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின், தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக, பேராசிரியர், மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 600க்கும் மேற்பட்ட, தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பல்கலையில், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள், கடந்தாண்டு, செப்டம்பர் முதல் காலியாக இருந்தது.இதையடுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியை தேர்வு செய்யும்பணி நடந்தது. இப்பணி முடிந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இணை பேராசிரியராக பணியாற்றிய, மணிவண்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர், விஸ்வநாதன் கூறுகையில்,""பதிவாளர் நியமனத்திற்கு, ஆட்சிமன்ற குழு அனுமதியளித்துள்ளது. இரு மாதங்களில் பதிவாளர் தேர்வு பணிகள் முடிந்து விடும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி