ஏடிஎம் பயன்படுத்துவோரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை எனும் பட்சத்தில் அந்த தகவல் திரையின் வழியாக முன் கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாவது தவிர்க்கப்படும். மேலும் ஏடிஎம் மையங்களில் பிரத்யேக குறியீட்டு எண் தெளிவாக தெரியும்படி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.ஏடிஎம் சேவையில் குளறுபடி அல்லது சிக்கல் எதுவும் ஏற்பட்டால் அதை புகாராக தெரிவிக்க இது வசதியாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் புகார் செய்ய வசதியாக உரிய படிவங்கள் ஏடிஎம் மையங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஏடிஎம் சேவைகள் தொடர்பான புகார்களை பெறும் வங்கி அலுவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதோடு வாடிக்கையாளர்கள் தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்க வசதியாக கட்டணமற்ற குறைதீர்ப்பு பிரிவு எண்ணும் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே ஏடிஎம்மை பயன்படுத்த அனுமதிப்பட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம் மோசடி நோக்கில் ஏடிஎம்மை பயன்படுத்துவது தடுக்கப்படும். மின்னணு முறை பரிமாற்ற முறை குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Aug 2, 2013
ஏடிஎம் சேவை: வங்கிகளுக்கு புதிய உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி