முதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2013

முதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு.

இன்று சென்னை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு தொடக்கக்கல்வித்துறையில்  உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.கண்ணன்அவர்கள் தலைமை வகித்தார். மேலும் அச்சங்கம் சார்பில் சார்பில் பொதுச் செயலாளர் திரு.பாலசந்தர் (பொறுப்பு), மாநில பொருளாளர் திரு.மோசஸ் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு  தலைவர் திரு.வையம்ப்பட்டி ராமசாமி, மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ரக்ஷித் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் மன்றம் சார்பில் மாநில தலைவர் திரு.தியாடர் ராபின்சன், திரு.அம்பை, திரு.அ. கணேசன் ஆகியோரும், தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில துணை தலைவர் திரு.ர.துரை, திரு.சிங்காரவேலு ஆகியோரும், SSTA சார்பில் பொதுச் செயலாளர் திரு.ராபர்ட், மாநில தலைவர் திரு.ரெக்ஸ் அனந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

1. அனைத்து சங்கங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
2. அடுத்தக்கட்ட கூட்டத்தில் அனைத்து சங்க சார்பில் அதன் பொதுச் செயலாளர்கள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.
3. அடுத்தக்கட்ட கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளாத சங்கங்களுடன் பேசி அவர்களையும் அடுத்த கூட்டத்தில் பங்கு பெறசெய்ய முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி