பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2013

பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்.

இரட்டைப்பட்டம் வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம் அடைந்து கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 22.08.2013 அன்று ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் நீதிபதிகள் மாறாதநிலை இருப்பதால் விசாரணை கண்டிப்பாக 22.8.2013 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.டி.இ.டி. தேர்வு நிறைவடைந்த நிலையில் தங்களுடைய பதவி உயர்வு கனவு காணல் நீராகி போய் விடுமோ என்ற கலக்கம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே வழக்கின் போக்கு அனைவராலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் வழக்கை நடத்தி வரும் நண்பர்களிடம் இது குறித்து விசாரித்தபொழுது வழக்கின் இறுதி விசாரணை 22.8.2013 அன்று ஏறத்தாழ நிறைவடைந்து ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வெளியாகிவிடும் என்று தெரிவித்தனர். அவ்வாறு தீர்ப்பு வெளியானால் தீர்ப்பின்தன்மையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொள்ளும் என தெரிகிறது. இதற்கிடையில் டி.இ.டி. தேர்வு முடிவுகளை வெகு விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானால் மட்டுமே புதிதாக ட்டதாரி ஆசிரியர்களை பணி அமர்த்தவோ, பதவி உயர்வு அளிக்கவோ இயலும். எனவே இரு தரப்பும் வழக்கு விரைவில் முடிந்தால் நல்லது என்ற நிலைக்க வந்துள்ளதால் விரைவில் தீரப்பு வெளியாகி அனைவரின் ஏக்கத்தை போக்கும் என நாம் நம்பகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி