முதுகலை தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில், அச்சுப்பிழை இருந்ததால், முடிவு வெளியிட தடை கோரி, தாக்கலான வழக்கு விசாரணையை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்தி வைத்துள்ளது.மணப்பாறை, ஆண்டனி கிளாரா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 605 முதுகலை தமிழாசிரியர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, ஜன.,27 ம் தேதி, நடந்தது. எனக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், 21 கேள்விகளில், பொருள் மாறும் வகையில், அச்சுப்பிழைகள் இருந்தன. அச்சுப்பிழை உள்ள தவறான கேள்விகளுக்கு, பதில் அளித்தவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்க வேண்டும். எனக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். நீதிபதி எஸ்.மணிக்குமார், இந்த மனு மீதான விசாரணையை, ஒத்தி வைத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி