பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாத இதழ் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, கடந்த ஜூன் மாதம் இதற்கான பணிகள் துவக்கப்பட்டது.கற்க கசடற என்ற தலைப்பில் வெளிவர உள்ள இந்த மாத இதழில் துறை சார்ந்த சிறப்பு நிகழ்வுகள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், சிறப்பு செய்திகள், முப்பருவ கல்வி முறை விளக்கங்கள், தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் சேர்க்கை, ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இடம்பெற்று இருக்கும்.பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஒருமாத காலத்தில் இந்த மாத இதழ் வெளியிடப்படும்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி