இரட்டைப்பட்டம் - வழக்கு உண்மை நிலை - ஓர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2013

இரட்டைப்பட்டம் - வழக்கு உண்மை நிலை - ஓர் விளக்கம்

இரட்டைப்படம் வழக்கு 1.8.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்அமர்வில் தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது இரட்டைப்பட்டம் முடித்தவர்களின் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள் 4வாரம் அவகாசம் கேட்டதாகவும் அதனை எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் தவறான தகவல்கள் திட்டமிட்டு சில ஆசிரியர்களால் பரப்பப்பட்டதாக திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.உண்மை நிலவரம் என்னவென்றால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மூத்த வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் அன்று ஆஜாராக இயலவில்லை. எனவே இருதரப்பும் தங்களுக்குள் பேசி முடிவெடுத்துவாய்தா கேட்டதாகவும் அதனாலேயே வழக்கு 6.8.2013 அன்று ஒத்தி வைக்கப்பட்டதாகவும் வழக்கை எடுத்து நடத்தும் நண்பர்கள்தெரிவித்தார்கள். நீதியரசர்களின் கட்டளையை இரு தரப்புமே ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் உண்மைக்கு புறம்பான செய்திகளை ஆசிரியர்கள் நம்ப வேண்டாம் எனவும் இது சம்பந்தமாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க வேண்டாம் எனவும் நம்மிடம் தெரிவித்தார். நண்பரின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க இத்தகவல் பகிரப்படுகிறது. இதனால் யாரும் வருத்தம் அடைய வேண்டாம் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.....
ஆ.முத்துப்பாண்டியன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி