கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2013

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.

தமிழகத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்ணடணி முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலங்குளம் வட்டார மறியல் போராட்ட ஆயத்த விளக்க கூட்டம் நடந்தது.ஆலங்குளம் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு ஆலங்குளம் வட்டார தலைவர் இம்மானுவேல் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.தமிழகத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25 முதல் சென்னையில் நடக்கும் தொடர் மறியல் போராட்டம் குறித்து விளக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பாதிப்புகளை நீக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு தனி தர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் தர்மராஜ் பிராங்களின், பொருளாளர் ஆறுமுகம், மேலிட பார்வையாளர் செய்யது இப்ராகிம் மூசா உட்பட பலர் பேசினர். வரும் 9ம் தேதி பாளையில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்கும் போராட்ட ஆயத்த கூட்டத்திற்கு ஆலங்குளம் வட்டாரத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.நிர்வாகிகள் பாலசுந்தரம், பாலசுப்பிரமணியன், சிவலை பாலு, கீதா கோமதி, முருகேசன், சின்னப்பன், சக்திவேல், மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.வட்டார துணை செயலாளர் அரிச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி