ஊதிய உயர்வு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து போராட மீண்டும் டிட்டோ&ஜாக் அமைப்பை உருவாக்க ஆசிரியர் இயக்கங்கள் முடிவு செய்துள்ளன.தமிழக இடைநிலை ஆசிரியர்கள் 1988ம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்தனர்.ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை சம்பளமும், ரூ.4,200 தர ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும், ரூ.2,800 தர ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 21 ஆண்டுகளாக ஒரே மாதிரியான ஊதியம் பெற்று வந்த தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆசிரியர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒரு நபர் குழுவில் தனி ஊதியமாக ரூ.750 அறிவிக்கப்பட்டது. ஆனால் அடிப்படை ஊதியம் மாற்றியமைக்கப்படவில்லை. மத்திய அரசில் புதிதாக சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியும் சேர்த்து மொத்தம் ரூ.24,300 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசில் புதிதாக சேரும் இடைநிலைஆசிரியர்களுக்கு அகவிலைப் படியும் சேர்த்து மொத்தம் ரூ.15,750 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் புதிதாக சேரும் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,550 வரையும், ஏற்கனவே பணிபுரியும் மூத்த ஆசிரியர்களுக்கு ரூ.15ஆயிரம் வரையும் ஊதிய இழப்பு ஏற்பட்டுவருகிறது. தற்போது மூவர் குழு பரிந்துரையிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. இது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக அரசை எதிர்த்து போராட தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ&ஜாக்) அமைப்பை மீண்டும் உருவாக்க ஆசிரியர் இயக்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி டிட்டோ&ஜாக் பொறுப்பாளர்களின் கூட்டத்தை வருகிற 18ம் தேதி சென்னையில் கூட்டியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்க பொறுப்பாளர்கள் மற்ற ஆசிரியர் இயக்கங்களுக்கு கடிதம் அனுப்பிவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி