பி.எட்., படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, நேற்று துவங்கியது. ரம்ஜான் பண்டிகை என்பதால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல்கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை, சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்; திருவல்லிக்கேணி, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் நேற்று துவங்கியது.திண்டுக்கல் காந்தி கிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி; சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி; மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி; தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் கல்வியியல்கல்லூரி; பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி.திருவட்டார், ஆற்றூர் என்.வி.கே. எஸ்.டி., கல்வியியல் கல்லூரி; குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக் கோட்டை, கோவை, வேலூர் அரசு கல்வியியல் கல்லூரிகள் ஆகிய, 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும் துவங்கியது. 16ம் தேதி வரை வரும், 16ம் தேதி வரை, விண்ணப்ப விற்பனை நடைபெறுகிறது.சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் விண்ணப்பம் வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், வரும் 16ம் தேதிக்குள், "செயலர், தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை - 2013, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை- 5" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி