ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு .... மூத்த ஆசிரியர்களுக்கும்தான் என்று வெளியிடப்பட்ட கட்டுரையில் ஒருசிறு திருத்தம் மற்றும் அதில் குறிப்பிட்டிருந்த கடிதத்திற்கு வெளியிடப்பட்ட Clarification letter ஐ உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2013

ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு .... மூத்த ஆசிரியர்களுக்கும்தான் என்று வெளியிடப்பட்ட கட்டுரையில் ஒருசிறு திருத்தம் மற்றும் அதில் குறிப்பிட்டிருந்த கடிதத்திற்கு வெளியிடப்பட்ட Clarification letter ஐ உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

மூத்த ஆசிரியர்களுக்கும் பாதிப்புதான். ஒத்த ஊதிய விகிதங்களில் பணியாற்றிய காலங்கள் தேர்வு/சிறப்பு நிலைகள் கணக்கிட1.1.2006 லிருந்து இயலாது என்பதற்கு பதிலாக 1.6.2009 லிருந்து இயலாது என்பதை பின்னர் 14.5.2012 இல் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தை வெளியிட்டு திருத்த விளக்கமளிக்க விரும்புகிறோம்.இதனை குறிப்பிட்டு இந்த கடித நகலை உங்களுக்காக நமக்கு அனுப்பி திருத்தம் செய்து வெளியிட உதவிய நண்பர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சிதம்பரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதங்கள் 1.1.2006 லிருந்துகணக்கிட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் 1.6.2009 இல் தான் அரசாணை வெளியிடப்பட்டதால் 1.1.2006 முதல் 31.5.2009 வரையிலான காலத்தில் பலர்,முந்தைய அரசாணைகளை பின்பற்றி ஒத்த ஊதிய விகிதங்களில் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு தேர்வு/சிறப்பு நிலை பெற்றிருப்பர். அவர்களுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கடித எண்.23373/S/2011-2, DATED09.08.2011 இன் படி நடைமுறைபடுத்தினால் 1.1.2006 முதல் 31.5.2009 வரையிலான காலத்தில் முந்தைய விதிகளை பின்பற்றி அளிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலைகளை ரத்து செய்து பணம் திருப்பி செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். எனவே இதனை ஒரு துறையின் இயக்குனர் அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதால்,கடித எண்.23373 - க்கு திருத்தம் செய்து கடித எண்.7296 நாள் 14.5.2012 வெளியிடப்பட்டுள்ளது.திருத்திய ஊதிய விகித விதிகள் 2009 இல் தேர்வு/சிறப்புநிலைக்கு என தனி ஊதிய விகிதம் அனுமதிக்கப்படாததால் 1.1.2009 -க்கு பிறகு உயர்பதவியில் தேர்வு/சிறப்பு நிலை கணக்கிட ஒத்த ஊதிய விகித பணிக்காலத்தை எடுத்துக்கொள்ள இயலாது என்பதை உங்களுக்கு விளக்கிட கடமைப்பட்டுள்ளோம்.

Thanks-Mr.Thomas Rockland trichy

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி