தமிழகத்தில் இந்த ஆண்டில் புதிதாக 148 அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்களின் 1.30 லட்சம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2013

தமிழகத்தில் இந்த ஆண்டில் புதிதாக 148 அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்களின் 1.30 லட்சம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க காரணம் ஆங்கில வழிக் கல்விதான் என்று கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து,தனியார் பள்ளிகளைப் போல
அரசு பள்ளிகளிலும் படிப்படியாக ஆங்கில வழிக்கல்வியை அமல்படுத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, பல அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி அறிமுக ப்படுத்தப்பட்டுவருகிறது.நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) புதிதாக 148 அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சம் அதிகரித்துள்ளது.ஆங்கிலவழிக்கல்வியை தீவிரப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க ப்பட்டிருப்பதை உறுதிசெய்வதுடன்புத்தகங்கள் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் ஆங்கிலவழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்குகல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும், வரும் கல்வி ஆண்டில் எத்தனை பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கலாம் என்ற பட்டியலை தயார்செய்யுமாறும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி