வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!!: வருமான வரித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2013

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!!: வருமான வரித்துறை.

வருமான வரித்துறை,வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தவறிய நபர்கள் மற்றும் ரிட்டர்னை தாக்கல் செய்து உரிய வரியை செலுத்துமாறு
வலியுறுத்தி மேலும்35,000நபர்களுக்கு,கடிதங்களைஅனுப்பி வைத்துள்ளது. இதுவரையில் சுமார் 2,45,000நபர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. "வருமான வரி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யாதோரை கண்டுபிடித்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒழுங்காக கட்டி முடிக்க கேட்டுக் கொள்ளும்படியான நடவடிக்கை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது,அதன் ஒரு பகுதியாக ரிட்டர்ன்களை தாக்கல் செய்யாத மேலும் சுமார்35,000பேருக்கு இந்த வாரம் கடிதங்கள் அனுப்பியுள்ளது. இத்துறை தனது டேட்டாபேஸை குடைந்து,வரி தாக்கல் செய்யாதவர்கள் என்று கண்டுபிடித்த சுமார்12லட்சம் நபர்களுள் மேற்கூறிய35,000பேரும் அடங்குவர். கடைசியாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த நபர்களோடு சேர்த்து,இத்துறை இதுவரை சுமார்2,45,000நபர்களுக்கு இது போன்று கடிதம் அனுப்பி வைத்துள்ளது." என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. முகவரியைமாற்றிய நபர்கள் அல்லது கடிதத்தை வாங்க மறுத்து விட்ட நபர்களை தொடர்பு கொள்ளும் பொருட்டு,களப்பணி உருவாக்கங்களின் உதவி நாடப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் பணியமர்த்தப்பட்டுள்ள வரிவிதிப்பு அதிகாரிகளுக்கு ஒரு ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் இத்தகைய நபர்களைப் பற்றிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். அந்நபர்களுடன் தொடர்பு கொண்டு,அவர் தம் ரிட்டர்னை தாக்கல் செய்யும்படியும்,செலுத்த தவறிய வரியை கட்டும்படி நெருக்கடி தருமாறு இவ்வரிவிதிப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி