தமிழகத்தில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை சிறப்பு பள்ளியிலோ அல்லது அரசு பள்ளியிலோ சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

தமிழகத்தில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை சிறப்பு பள்ளியிலோ அல்லது அரசு பள்ளியிலோ சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை சிறப்பு பள்ளியிலோ அல்லது அரசு பள்ளியிலோ சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து
பல்வேறு கிராமங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையத்தின் சார்பில் இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி கிராமங்களில் உள்ள இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி வட்டார வள மையத்தின் சார்பில் தொடங்கியது. மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் பணியை மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்பில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 5 பேரும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11 பேரும் கண்டறியப்பட்டு அவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி