பணிக்கு "கல்தா' கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2013

பணிக்கு "கல்தா' கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என,கல்வித்துறை எச்சரித்துள்ளது. கல்வித்துறையின் அனைத்து வேலை
நாட்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவசியம் பணியில் இருக்கவேண்டும் என்ற அரசாணை ஏற்கனவே உள்ளது. சில தவிர்க்க, முடியாத காரணத்தால் மட்டுமேபொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.தற்போது, காலாண்டு விடுமுறை துவங்கிய நிலையில், பள்ளிக்கல்வித்துறை கேட்கும் புள்ளி விவரங்களை சேகரிப்பதில் கல்வித்துறை ஊழியர்கள் சிரமப்படுவதாக புகார்எழுந்தது. இதையொட்டி, சி.இ.ஓ.,க்கள் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். சில பள்ளிகளுக்கு டெலிபோனிலும் பேசி, பணியில் இருக்கிறார்களாக என, உறுதிப்படுத்த முயன்றனர்.சிவகங்கை உட்பட சில மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பலர் பணியில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் இலவச பொருட்களின் வினியோகம், கல்வித் உதவித்தொகை, தேர்வு பெயர் பட்டியல்களை பெற முடியவில்லை. அரசின் விதிமுறையை மீறி,பணிக்கு வராத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என,கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி