முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2013

முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும்,   14 இடங்களில் நடக்கின்றன இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பின்போது,
உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமிழ் அல்லாதஇதர பாடங்களுக்கு, தற்காலிகமாகதேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர்என்ற வீதத்தில். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கிறது. 32 மாவட்டங்களும், இந்த, 14 இடங்களில் அடங்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டு, , www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி.,இணையதளத்தில்,  வெளியிடப்பட்டது. மேலும்,சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இருப்பவர்களுக்கான அழைப்பு கடிதங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தேர்வர்கள், 'ரோல் எண்'களை பதிவு செய்து, தங்களுக்கானmஅழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, பல கட்டங்களாக நடக்கும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு,மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், பல கட்டங்களாக மீண்டும், மீண்டும் நடத்தப்படும். ஆனால், இம்முறை அதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும், சான்றிதழ்சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காததேர்வர்களின் தேர்வு, ரத்தாகிவிடும் என்றும், டி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது,என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்ற முழுமையான விவரங்களையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிவிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, நவம்பர், 10ம் தேதிக்குள், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, 2,200 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. PG TAMIL:

    More than 10 PG TAMIL frnds who scored more than 100(in all A B C D SERIES) shared their own thoughts from many dist.

    We want to wait still the CV date 22.10.2013 or 10 days for the news of further appeal from trb & tn govt in PG TAMIL issue.

    If there is further delay in appeal against re exam judgement or as re exam intimation from trb or merging the Pg tam vacancy in next recruitment - we gather & file a writ against the Re exam judgement given by Madurai HC within Nov 8th(5th week of judgement).

    Nobody have the right to discard our hardwork. Having a great hope that, tn govt & trb still now have no idea of conducting re exam. They together file further appeal 100% soon & get the good judgement against Madurai HC judgement & release the PG tamil CV list by considering the hardwork of A C D series candidates & acceptable right solution to B series.

    Pg Tamil candidates do gather more in this website & share ur comments to get justice by not conducting PG Tamil Re exam & publishing the result & CV list soon.

    We the 75% hardworkers of all A C D series & 15% B series who fills more than 450 seats out of 605 vacancy those who scored more than 95 with complete hardwork - hav the right to ask trb & govt & court to cancel the Re exam judgement.

    We all need better solution to B series with not wasting the toil of A C D series & publish the list soon & appoint along with other pg subjects even the cv date get delayed due to late appeal by trb & tn govt.


    siranjeevi1983@gmail.com
    9047902861.

    ReplyDelete
  2. We request TN govt & TRB to take quick steps in PG Tamil issue & appeal soon & appoint along with other Pg subjects.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி