20,836 கண்டு பிடிப்புகளில் சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளிமாணவன் படைப்புஇந்திய அறிவியல் போட்டியில் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2013

20,836 கண்டு பிடிப்புகளில் சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளிமாணவன் படைப்புஇந்திய அறிவியல் போட்டியில் தேர்வு.

நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 20,836 கண்டுபிடிப்புகளில் சிறப்பானவையாக தேர்வு செய்யப்பட்ட 38 கண்டு பிடிப்புகளில் நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி மாணவன்
கவுதம் பிரவீன் அறிவியல் கண்டு பிடிப்பும் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையை சார்ந்த ஆமதாபாத்தில் அமைந்துள்ள நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேசன் நடத்திய இக்னைட்2013 என்ற அறிவியல் போட்டியில் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 20,836 கண்டுபிடிப்புகளில் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 38 கண்டுபிடிப்புகளில் நெல்லை சங்கர்நகர் ஸ்ரீ ஜெயந்திரா பள்ளி மாணவன் கவுதமன் பிரவீன் புதிதாக கண்டுபிடித்துள்ள தரையில் நின்றபடியே பல்புகளை எளிதில் கழற்றிமாட்டும் புதிய கருவியும் ஒன்று. வரும் காலங்களில் இந்த புதிய கருவி நடைமுறைக்கு வரும்பொழுது உங்கள் வீடுகள், கடைகள், உயரமான கட்டடங்கலுள்ள பல்புகளை மாட்டுவதற்கு மேசை, நாற்காலி, ஏறி போன்றவை தேவையில்லை. தரையில் நின்றபடியே எளிதாக பல்புகளை கழற்றி மாட்டலாம். வரும் நவ.19ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் முன்னாள் குடியரசு தலைவர் கண்டுபிடிப்புகளை நேரில் பார்வையிட்டு இளம் விஞ்ஞானிகளை பாராட்டி பரிசுவழங்குகிறார்.இதை கண்டுபிடித்த மாணவன் கவுதம் பிரவீன் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர். இவர் ஜெயேந்திரா பள்ளியில் 11ம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். மாணவனை பள்ளி முதல்வர் உஷாராமன், தாளாளர் நிர்மலா ராமரத்தினம், துணை முதல்வர் கங்கா மணி, மாணவனின் தந்தை ஆறுமுகநயினார், முத்துலெட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி