இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி நவம்பர் 24-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2013

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி நவம்பர் 24-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம்.

ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது' விடுமுறைநாட்களில் ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றார் ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச் செயலாளர் க.மீனாட்சிசுந்தரம். அறந்தாங்கியில்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியக் கிளை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியது: ஆசிரியர்களுக்கு சனிக்கிழமைகளில் வட்டார வள மையம் மற்றும்அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் ஆணையம் தேர்தல் வகுப்புகளை நடத்துவதால், ஆசிரியர்கள் ஓய்வின்றி பணியாற்றும் நிலை ஏற்படுகிறது. எனவே, விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரியும்,பங்கேற்பு சேமநலநிதித் திட்டத்தை திரும்பப் பெற கோரியும், நவம்பர் 24-ம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி