இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு.

இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில்முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்குவிசாரணைக்கு வந்தது. இதில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் இதுவரை இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இல்லாத நிலையில் இந்த வழக்கில் வாதாட இயலாது எனவும், எனவே மறு தேதி வேண்டும் எனவும் கோரினார்.எனவே நீதியரசர்கள் வருகிற 24.10.2013  வியாழக்கிழமை ஒத்தி வைத்தனர். இது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. விரைவில் இவ்வழக்கு நிறைவு பெற வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி