குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2013

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி.

"டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 போட்டி தேர்வுக்கென, சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்படும்," என வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள
குரூப் 2 போட்டி தேர்விற்கு சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.இப்பயிற்சி, அக்.,5 முதல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தன்னார்வபயிலும் வட்ட அலுவலகத்தில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். கட்டணம் இல்லை. விபரம் வேண்டுவோர், வேலைவாய்ப்பு அலுவலக போன் எண்: 04575 - 240 435ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி