கோவையில் அங்கீகாரம் இல்லாத 30 நர்சரி பள்ளிகள் மூடும் அபாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2013

கோவையில் அங்கீகாரம் இல்லாத 30 நர்சரி பள்ளிகள் மூடும் அபாயம்.

கோவை மாவட்டத்தில் தொடர் அங்கீகாரம் இல்லாததால் 30 நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் -2009ன் படி தமிழகத்தில்
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் துவங்க முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறுவது அவசியம்.மேலும், கட்டட உறுதி, தீயணைப்புத்துறையினரின் தடையின்மை சான்று உள்ளிட்ட சான்றிதழ்களுடன், உரிய காலத்துக்குள் ஒப்புதலை புதுப்பிப்பதும், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு.மாநிலம் முழுவதும் மே மற்றும் ஜூன் மாதங்களில் 900 நர்சரி, பிரைமரி பள்ளிகள்அங்கீகாரம், அடிப்படை வசதிகள், நில அளவு குறைவு போன்ற காரணங்களால் அதிரடியாக பள்ளிக்கல்வித்துறையால் மூடப்பட்டது. மேலும், சில பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்து கொள்ளவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்பட்டது.அதன்படி "அனைத்து தனியார் பள்ளிகளின் தரம் குறித்து கல்வி அதிகாரிகளின் தலைமையிலான குழு, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, விதி மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்வது அவசியம்" என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, சமீபத்தில் சென்னையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதைத்தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ரத்து செய்வதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது.முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 30 பள்ளிகள் நில அளவு, அடிப்படை வசதி குறைவு, அங்கீகாரம் இன்மைபோன்ற காரணங்களால் மூடப்பட்டன. நடப்புக் கல்வியாண்டில் அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.தற்போது 30 பள்ளிகள் இப்பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அரசு விதிமுறைப்படிஆய்வுகள் மேற்கொண்டு, பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்குள் பள்ளிகள் தங்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம். மேலும், தாமதிக்கும் பட்சத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்," என்றார்.திக்கும் பட்சத்தில் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும்," என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி