7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2013

7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் திட்டம்!

அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில்7-ஆம் வகுப்பு மற்றும்8-ஆம் வகுப்பு படிக்கும்ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.2013-2014ஆம்
ஆண்டுபெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ்3முதல்5-ஆம் வகுப்பு வரை மற்றும்6-ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மாணவிகளுக்கு வழங்கும் பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை7-ஆம் வகுப்புமற்றும்8-ஆம் வகுப்புக்கும் விரிவுப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி7-ஆம் வகுப்பு மற்றும்8-ஆம் வகுப்புப் பயிலும் ஆதிதிராவிட,பழங்குடியின மாணவிகளுக்கு மாதம்ரூ.150வீதம்10மாதங்களுக்கு ரூ.1,500வழங்கஅனுமதிக்கப் பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம்பயன்பெற அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,உதவியாளர் மூலம்பெண்கல்வி ஊக்குவிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகம் மூலம் பெற்று,பூர்த்தி செய்து,மாணவியின் சாதிச்சான்று அல்லது வட்டாட்சியர் சான்று இணைத்து,திரும்ப அனுப்ப வேண்டும்.அனுமதிக்கப்படும் ஊக்கத்தொகை மாணவிகளின் பெயரில்உள்ளவங்கிக் கணக்கு அல்லதுமாணவியரின் தாய் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கு எண்ணில் செலுத்தப்படும்.எனவே,மாணவியரின் பெயரில் வங்கிக் கணக்கு அல்லது மாணவியின்தாயின் பெயரில் அஞ்சலகக் கணக்கு துவக்கப்பட்டு,மேற்படி கணக்குஎண் விவரம் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத் திட அனைத்துஅரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி