தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2013

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல்அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.தமிழகத்தில் உள்ள
2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது. இவற்றில், 4,000 தொழிற்கல்வி ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களைப் போல், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்படுவதில்லை. 34 ஆண்டுகளாக, ஆசிரியர்களாகவே பணியாற்றி, எவ்வித பதவி உயர்வும் இல்லாமல், ஓய்வு பெறுகின்றனர்.இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர், ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரை (தொழிற்கல்வி) சந்தித்து பேசினர்.இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறுகையில், "எங்களுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என, இயக்குனரிடம் வலியுறுத்தினோம். நியாயமான இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக, இயக்குனர் உறுதி அளித்தார்" என்றார்.
www.kalviseithi.net

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி