சைனிக் பள்ளியில் சேர்க்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2013

சைனிக் பள்ளியில் சேர்க்கை.

மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ரெசிடன்ஷியல் பள்ளிதான் சைனிக் பள்ளி. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும்,
மாணவர்களை இந்திய ராணுவம், மற்றும் விமானப் படையில் அதிகாரிகளாகத் தயார்படுத்தும் இப்பள்ளி தமிழ்நாட்டில் உடுமலை தாலுகா, அமராவதியில் உள்ளது.சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள இப்பள்ளியில் 6 முதல் 12 வரை படிக்கலாம். பெற்றோரின் மாத வருமான அடிப்படையில் 50,000 ரூபாய் வரை, மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும்.தற்போது, இங்கு 6 மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பைபள்ளி வெளியிட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவிகள் சேர முடியாது. காலியாக உள்ள இடங்கள், 6ம் வகுப்பில் - 100, 9ம்வகுப்பில் - 25.விண்ணப்பப் படிவம் பெற முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம் - 642102 என்ற முகவரிக்கு அமராவதி நகரில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் (கிளை எண் 21911)  பெறத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.650, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500ம் டிடி எடுத்து அனுட்பப வேண்டும்.விண்ணப்பங்கள் நவம்பர் 30ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர டிசம்பர் 7 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகின்றது. மேலும் விவரங்களுக்கு 04252 -256246, 04252 - 256296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.sainikschoolamaravahinagar.edu.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி