ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2013

ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு.


சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி
கொண்டுவரப்பட்டதால், தமிழ் பேசும் மாணவர்கள் குறைந்து போவார்களோ என்ற கவலை உள்ளது. தமிழ் மொழி அதன் செல்வாக்கை இழந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது என்றார். அப்போது அமைச்சர்பி.பழனியப்பன் கூறியது:

ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்புக்கு என்று செல்லும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேலும் ஆங்கில வழிக் கல்விக்காகவே தனியார் பள்ளிகளில்மாணவர்களைச் சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் பள்ளிகளையும் தவிர்த்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் 1.21 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி