முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2013

முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும்?

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து,உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி.,அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.ஆசிரியர் தேர்வு வாரியம்,அரசு மேல்நிலைப்பள்ளிகளில்,2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை
நிரப்ப,ஜூலை,21ல்,போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர்,தேர்வை எழுதினர்.இதில்,அதிகபட்சமாக,தமிழ் பாட தேர்வை,33,237 பேர்எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு,தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி.,தயாரான நிலையில்,தமிழ்பாடகேள்வித்தாளில,47 கேள்விகள்,பிழையுடன் இருந்ததாககூறி,மதுரையைச் சேர்ந்த தேர்வர்,உயர்நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை,ரத்து செய்து,புதிதாக,வேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து,கோர்ட் தீர்ப்பின்படி,தமிழ் பாடதேர்வர்களுக்கு,புதிய தேர்வை நடத்துவதா,அல்லது,மேல் முறையீடு செய்வதா என டி.ஆர்.பி.,தமிழக அரசின் ஆலோசனையை பெற்று,அதனடிப்படையில்,முடிவு எடுக்கப்படும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட்டபோதும் அரசு தீர்ப்பைஎதிர்த்தது மேல்முறையீடு செய்யுமா?அல்லது மறுதேர்வு நடத்துமா?என்பது ஓரிருநாளில் தெரியவரும் .மேலும் அரசின்முடிவுக்காக காத்திருக்கும் ஏ,சி,டி பிரிவில் தேர்வு எழுதி மறுதேர்வால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கருதும் தேர்வர்கள் சிலர் மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.டி.ஆர்.பி.,எந்தமுடிவை எடுத்தாலும்,முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம்,தள்ளிப்போகும்.,தற்போதையசூழல் காரணமாக,தமிழ் ஆசிரியர் நியமனம்,தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. yanai thannoda thalayil mannai vari potta kathaya pochea!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி