தனியார் பள்ளி அறைகள் அரசின் இலவசப் பொருட்களால் ஆக்கிரமிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

தனியார் பள்ளி அறைகள் அரசின் இலவசப் பொருட்களால் ஆக்கிரமிப்பு.


மதுரை மாவட்டத்தில் அரசு இலவச நலத்திட்டப் பொருட்களைப் பாதுகாக்க பள்ளி அறைகள் ஆக்கிரமிப்படுவதை தடுக்க அரசு"குடோன்"களை ஏற்படுத்த வேண்டும், என
ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.மாவட்டத்தில் 1,018 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1.86 லட்சம் மாணவர்கள், 291 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2,12,027 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, அரசு சார்பில் புத்தகம், நோட்டு, பை, சீருடை, கலர் பென்சில், சைக்கிள், "லேப்டாப்" உட்பட 14 வகை இலவச பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது.இலவச புத்தகங்கள், "லேப்டாப்"கள் தவிர நோட்டுகள், சீருடை, செருப்பு உள்ளிட்டவைநேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது என்ற பெயரில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஏதாவது சில அரசு உதவி பெறும் பள்ளிகளின் வகுப்பறைகளில் இறக்கி பாதுகாக்கப்படுகின்றன.இப்படி, இறக்கி வைக்கப்பட்ட இலவச பொருட்கள் 8 ஆண்டுகளாக மேலூர், ஆரப்பாளையம், கருமாத்தூர், செக்கானூரணி பகுதி பள்ளிகளின் வகுப்பறைகளை ஆக்கிரமித்துள்ளன. உயர்அதிகாரிகள் உத்தரவால் நிர்வாகிகளும் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் மரநிழலில் படிக்க வேண்டியுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: "கற்பித்தல் பணிகளுக்கு இடையே 14 வகை அரசுநலத் திட்டப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்குவது சவாலாக உள்ளது. அரசு ஒதுக்கீடுசெய்த பின் பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.அரசு பள்ளிகளில் இட வசதியில்லாததால் உதவி பெறும் பள்ளிகளை நம்ப வேண்டியுள்ளது. எனவே, கல்வி மாவட்டம் வாரியாக அரசு குடோன்கள் அமைத்தால் பொருட்களை அங்கு வைத்துபள்ளிகளுக்கு வழங்க எளிதாக இருக்கும்," என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி