சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தை எளிதாககற்பிப்பது தொடர்பான 2 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.சென்னை மாநகராட்சியில் மொத்தம் 284 பள்ளிகளும் 30 கிண்டர்கார்டன் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு, எளிதாக மாணவர்களுக்கு புரியும் வகையில் கணித பாடத்தைக் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தியாகராய நகரில் உள்ள தியாகராய அரங்கத்தில் நடைபெறும்இந்த 2 நாள் பயிற்சியை மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.முதல் நாள் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு கணித வகுப்பு எடுக்கும் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் 283 பேர் கலந்து கொண்டனர்.சனிக்கிழமை நடைபெறும் பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் 10-ஆம் வகுப்பு பயிலும் தலா 5 மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமா ஜானு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
Oct 5, 2013
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
When tet and trb result
ReplyDeleteWhen tet and trb result
ReplyDelete