கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2013

கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்.

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இது பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக தரமான கல்வி
வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.அதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இதற்கிடையே பள்ளிக் கல்வியின் நிலை குறித்தும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்தும் பல்வேறு தனியார் அமைப்புகள் சர்வே நடத்தி வருகின்றன.

ஆய்வு முடிவுகளின்படி தொடக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின்கல்வித் தரம் குறைவாக உள்ளது. வாசித்தல் திறன் இல்லை. பள்ளிகளின் சூழலும்சரியில்லை என்று தெரியவந்துள்ளது. இது போன்ற ஆய்வுகளால் கலக்கம் அடைந்துள்ள பள்ளிக் கல்வித்துறை இப்போது குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் டிஇஓ, மேற்பார்வையாளர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு ஒன்றியம் வாரியாக பள்ளிகளை திடீர் ஆய்வு செய்கிறது. குறிப்பாக ஒரு மாவட்டத்தில் 100 பள்ளிகள் இருந்தால் அவற்றில் 40 பள்ளிகளோ அல்லது 70 பள்ளிகள் இருந்தால் அவற் றில் 20 பள்ளிகளையோ குறிவைத்து ஆய்வு செய்கின்றனர். மாணவ மாணவியரின் வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி நிலை எப்படி உள்ளது, செயல்பாடுகள் எப்படி உள்ளது, பள்ளியின் சூழல் எப்படி உள்ளது, நிர்வாகம் எப்படி உள்ளது, பள்ளிச் சூழல் எப்படி உள்ளது என்பதை இந்த குழு ஆய்வு செய்கிறது.மேலும் மாணவர்களின் எழுத்தறிவு, எண்ணறிவு குறித்து சிறிய தேர்வு வைத்தும்ஆய்வு செய்கின்றனர். இது தவிர, செயல்வழிக் கற்றல் வழியில் உள்ள அட்டைகளை மாணவர்கள் எப்படி கையாளுகின்றனர் என்பதையும் பார்க்கின்றனர்.

இது போல் அனைத்து தொடக்க நடுநிலை, உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் மேற்கண்ட குழு ஆய்வு செய் கிறது. ஏதாவது ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாடத் தில் மாணவர்கள் மேற்கண்ட ஆய்வுகளில் தேறவில்லை என்றால் அந்த பாட ஆசிரியர்களுக்கு ‘மெமோ’ வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் பணியுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ஆதார் அட்டை வழங்குவது,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பணியிடைப் பயிற்சி, கணினி பயிற்சி, புத்தாக்கப் பயிற்சி என்று பயிற்சிக்கு அழைக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் தங்களை ‘அப்டேட்’ செய்துகொள்ள முடியாத நிலை உள்ளது. பாடம் நடத்துவதற்கு போதிய நேரம் இல்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் பயன் இல்லை.மேலும் கடந்த வாரம் ஆசிரியர்கள் தரப்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டார். இது தவிர, பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிறை ய காலியாக உள்ளன. இதற்கிடையே ஒரு குழுவை அமைத்து ஒன்றியம் வாரியாக ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளனர்.குழுவின் ஆய்வுக்கு பிறகு, ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிகிறது. இதனால் கிராமப் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பள்ளிகளை மூடுவதை விட்டு கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்கள் அதிக அளவில் சேர்வார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் தகவல்:

தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 691 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி