இசை மற்றும் கவின்கலை பல்கலை அமைப்பதற்கான மசோதா தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2013

இசை மற்றும் கவின்கலை பல்கலை அமைப்பதற்கான மசோதா தாக்கல்.


தமிழகத்தில், இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சர்
பழனியப்பன் அந்த மசோதாவை தாக்கல் செய்தார்.இசை மற்றும் கவின் கலைகள் தொடர்பாக உயர்நிலை பயிற்சி மற்றும் பல்வேறு வகையான ஆராய்ச்சி ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக அமைக்கப்படும் இப்பல்கலை, சென்னை அல்லது சென்னை அருகே 100 கி.மீ. சுற்றளவு தொலைவிற்குள் அமைக்கப்படும் என்று அந்த சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த மசோதாவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இன்றைய மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப, இசை மற்றும் நுண்கலை மேம்பாட்டை கொண்டு செல்வதற்கான முயற்சிகள் இப்பல்கலையின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.தற்போது தமிழகத்திலுள்ள பல கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டு வரும் இசை, கவின்கலை, சிற்பக்கலை உள்ளிட்ட நுண்கலை சார்ந்த படிப்புகளை முறைப்படுத்தவும், இவைசார்ந்த சிந்தனைகள் மற்றும் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒரு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தை மாநிலத்தில் அமைப்பது அவசியமாகிறது.இப்பல்கலைக்கு, மாநிலத்தின் முதலமைச்சர் வேந்தராக இருப்பார் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அதன் இணை வேந்தராக செயல்படுவார்.மேலும், இப்பல்கலைக்கென்று நியமிக்கப்படும் துணை வேந்தர் முழுநேர அலுவலராக செயல்படுவார். இவ்வாறு அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி