முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இப்போதைக்கு வராது-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இப்போதைக்கு வராது-Dinamalar News

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு,சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில்,
ஐகோர்ட், மதுரை கிளைவெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வு நடந்தது. அடுத்தடுத்த பணிகளை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறி, ஐகோர்ட், மதுரை கிளையில், ஒரு தேர்வர், வழக்கு தொடர்ந்தார். தமிழ் பாடத்திற்கு,மறு தேர்வை நடத்த, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மறு தேர்வை நடத்துவதா, அல்லது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதா என, இதுவரை, டி.ஆர்.பி., முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று துவங்கியது. மாநிலம் முழுவதும், 14 மையங்களில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது.இந்நிலையில், வரலாறு பாடத்தில், 111 மதிப்பெண் எடுத்தும், தமக்கு, சான்றிதழ்சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தை, டி.ஆர்.பி., அனுப்பவில்லை என்றும், இதே மதிப்பெண் எடுத்த மற்றவர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, ஜான் ஆபிரகாம் என்பவர், ஐகோர்ட், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், விலங்கியல் பாடம் சம்பந்தமாகவும், வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, நாகமுத்து, ஒவ்வொரு பாடத்திலும், கடைசி,"கட் ஆப்" மதிப்பெண் பெற்றவர் வரை, அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன் பட்டியலை, கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டார். இதன் காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.இவ்வளவு பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது குறித்த அட்டவணையை, விரைவில் தயாரிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, இப்போதைக்கு, தேர்வுப் பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் தாமதத்தால், மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்காமல் இருக்க, 2,645 முதுகலை ஆசிரியர்களும், 3,900 பட்டதாரி ஆசிரியர்களும், தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்ய, கடந்த, 7ம் தேதி, முதல்வர் உத்தரவிட்டார்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்ட போது, "80சதவீத ஆசிரியர், பணியில் சேர்ந்துவிட்டனர். மீதம் உள்ள, 20 சதவீத ஆசிரியர்களும், இந்த வார இறுதிக்குள் சேர்ந்துவிடுவர்" என்றார். "ரெகுலர்" முதுகலை ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனம், மாணவர்களுக்கு, பெரிதும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

26 comments:

  1. yenna ithu loosu thanama irukku, yetharku yellorukkum CV. last time pola 1:2 pothumea?

    ReplyDelete
  2. Appa tet result ooooooooooooooooooh

    ReplyDelete
  3. Atmost 7 marks to be awarded after cv so trb may call 1:7 for every category. it is enough.





    ReplyDelete
    Replies
    1. you are exactly correct.

      Delete
    2. appa kastapattu padichu mark vangunavanga ellam roadla nikkarada?

      Delete
  4. Dinamalar has to check their news before they publish. It has been stated that certificate verification should be done only to those candidates who have got the last cut-off mark and not the last mark. So there is no need of certificate verification for all the 1.6 lakh candidates.

    ReplyDelete
    Replies
    1. dinamalar news thappahathu gi...............

      Delete
    2. absolutly correct bcoz p.g exam announcemnta dinamalar news paperla trb adverisement kodukkale trb sambanthamaga entha arivippum dinamalarla varaathu. True news only thinathanthi varuthu. Dinamalar paparukku Trb mel ulla kobam ippa puriyutha?

      Delete
    3. I think dinamalar news almost right in the sense of same was published in Hindu news papers, it clearly says that "IN COURT TRB RECORDED THEIR VOICE AS" TRB WILL RELEASE COMPREHENSIVE LIST OF CANDIDATE FOR CV IN THE NEXT WEEK" . hence the both news clearly says that all will call for cv.

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. don't use the word ;like this, since we are going to become a teacher.

      Delete
  6. Dinamalar reporter misunderstood and published the news...see tomo paper news will be changed...counselling by next month...

    ReplyDelete
  7. Only 7 marks will be changed final selection list , so trb will be called maximum 7 marks less than last cut off every subject.

    ReplyDelete
  8. frnz ithelamdinamalar newspaperla publish panirkangala?

    ReplyDelete
  9. Tet results in 10 days November 4 Delhi committee thagaval

    ReplyDelete
    Replies
    1. sir trb comite 1ly dcide abt publish d result

      Delete
  10. CV process completed...hereafter no one called for cv....

    ReplyDelete
    Replies
    1. yaru sir ungaluku intha mari newsa kudukrathu?

      Delete
    2. Yes u r right frnd.

      Delete
  11. mariyathaikuriya judge nagamuthu sir kalakkunga...................
    trb ya oru vali panni than vidanum sir

    ReplyDelete
    Replies
    1. if u are a hard worker and expecting results...u wont comment like this...many hard worked candidates left their job and waiting for appointment...but this justice doing like this without knowing anything....

      Delete
    2. Mariyathaikuriya Nanba. Family ya city job vitu vetti payanu thittu vangi hard work panni general turn la select agi job kaga kathittu evlo per irukkanga theriuma.

      Delete
  12. frnz tet result varapa varatum.athkula nigala ethachum romoura kilapuratha stop panuga plz

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. TRUE NEWS ABOUT PG CV & EXPECTATIONS OF PG TAM CANDIDATES

    Madurai HC ordered TRB only to produce last cut off candidates list on hearing oct 28th. NOT TO CONDUCT CV FOR ALL CANDIDATES OF ALL SUBJECTS AS MENTIONED ABOVE IN PAPER NEWS.

    Note that, filed 3 last cut candidates only filed writ to join themselves in CV to b conducted. But the judge just stayed the publication of CV list by TRB. Even though the candidates didnt asked stay-asked only to just call them for CV, judge voluntarily gives stay for the process of TRB!!! What's going on????

    Likewise in PG TAMIL issue, Madurai HC stood by for conducting Re exam from 1st to last without considering the words of 4 A C D candidates writ & TRB. No subject expert committee was framed by madurai HC to analyse B series tamil pg question before re exam judgement. It is acceptable that, Judge wil b an expert in law points but not in PG Tamil subject. Re exam judgement is a true justice only if it is finalised after the decision of subject experts.

    3rd week painfully passed away after Re exam judgement. But TN Govt & TRB is not ready to conduct it. Also they didnt released the further move. All PG tam candidates mind get collapsed out of unwanted pressure & tension. PG tam further appeal was not made still by tn govt.

    All other subject candidates successfully attended CV & got the new marks CV certificate with addition of their weightage marks with written marks. We PG tam candidates, r in heavy sorrow expecting the +ve next move from respected TN Govt & TRB within the additional CV list of last cut off PG candidates. We guess that there is no re exam 1000% to b conducted here after for PG Tamil. We appreciate the same decision from govt since re exam wastes the hardwork of more PG TAMIL candidates. But what's the next step?

    Appealing & getting judgement against Re exam judgement from HC bench or any other different move??? Anyway, we the Pg Tamil hardworkers request our govt to give solution before publishing Final selection list of other Pg results & we r confident that PG TAMIL candidates r also appointed along with other subject PG candidates.

    ReplyDelete
  15. Additional provisional CV list for last cut off candidates are published in TRB official website as per the judgement of Madurai HC.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி