மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்பு மற்றும் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.5) சென்னையில் நடைபெறுகிறது. மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.1.1.2011 முதல் 7வது ஊதி யக் குழு அமைக்க வேண் டும் என வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதன் விளைவாக மத்திய அரசு 7வது ஊதியக் குழு அமைத்துள்ளது.மேலும், அக்குழுவின் முடிவுகள் 2016 ஜனவரி மாதம் முதல் அம லாக்கப்படும் என்று அறி வித்துள்ளது.7வது ஊதியக்குழு பரிந் துரைகளை 1.1.2011 தேதியி லிருந்து அமல்படுத்த வேண் டும். 50 விழுக்காடு பஞ்சப்ப டியை அடிப்படை ஊதியத் துடன் இணைத்து, ஓய்வூதி யம் உள்ளிட்டஅனைத்து நிதிப் பயன்களையும் வழங்க வேண்டும் என்று கோரி க்கை திசை திருப்பும் வகை யில் அரசின் அறிவிப்பு உள் ளது.எனவே, மேற்கண்ட கோரிக்கைகளோடு 3 லட் சம் கிராம அஞ்சல் துறை ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்து, அவர்களை 7வது ஊதியக்குழு வரம்புக் குள் கொண்டு வர வேண் டும், மத்திய அரசுத்துறைக ளில் காலியாக உள்ள 6 லட் சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,ஓராண்டு காலியாக இருந் தால் அந்த பணியிடங்களை நிரப்பத் தேவை யில்லை என்ற அரசின் முடிவை திரும்ப பெறவேண் டும், பணியில் சேர்ந்தவர்க ளுக்கு ஓய்வு பெறுவதற்குள்குறைந்தது 5 பதவி உயர்வு வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட் டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியு றுத்தி டிசம்பர் மாதத்தில் காலவரையரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடை பெற உள்ளதுஇதனையொட்டி மத் திய அரசு ஊழியர் மகா சம் மேளனம் சார்பில் அக்.5 அன்று சென்னை தி.நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி