ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2013

ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தகவல்

"தமிழ்நாடு அரசு ஆவண காப்பகங்களில், ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.சட்டசபையில்
நேற்று கேள்வி நேரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சரத்குமார், "தமிழ்நாட்டில், ஆவணக் காப்பகங்களில், நவீன தொழில் நுட்பம் மூலம் ஆவணங்களை பாதுகாக்கும் செயல்குறிப்பு அரசிடம் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாப்பதற்காக, அவற்றை ஸ்கேனிங் மற்றும் நுண் படங்களாக்கும் பணி படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. ஏனைய ஆவணங்களையும், கம்ப்யூட்டர் மயமாக்குதல் மற்றும் நுண் புகைப்படம் எடுத்தல் பணி மேற்கொள்ள, 2012 -13ல், பகுதி இரண்டு திட்டம் மூலம் 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில், அரசு ஆவண காப்பகம் உள்ளது. அதேபோல், திருச்சி, கடலூர், சேலம் உட்பட ஐந்து மாவட்டத் தலைநகரில் ஆவண காப்பகம் உள்ளது. இங்குள்ள ஆவணங்களை பாதுகாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.அதைத் தொடர்ந்து, சரத்குமார் பேசும்போது, "ஆவணங்களை உரிய முறையில் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது அவசியம். ஆவணங்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நன்றி. திருநெல்வேலியில் ஆவண காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். கோரிக்கையை பரிசீலிப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.
www.kalviseithi.net

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி