1,093 உதவி பேராசிரியர் பணியிடம் : சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2013

1,093 உதவி பேராசிரியர் பணியிடம் : சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி துவக்கம்.


தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம்தேதி முதல் துவங்குகிறது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள, 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், மே, 28ம் தேதி விளம்பரம்வெளியிடப்பட்டது. இதன்படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், ஆகஸ்ட், 12ம் தேதி வரை பெறப்பட்டன.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி முதல், பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு, சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரி; காமராஜர் சாலையில் உள்ள, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்; அண்ணாசாலையில் உள்ள, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதம், சுயவிவரப் படிவம், ஆளறி சான்று, சான்றிதழ் சரிபார்ப்பு படிவம் ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள், அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றிதழ்சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும். அழைப்புக் கடிதம், விண்ணப்பத்தாரர்களுக்கு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ததன் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுகின்றனர். விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள், விளம்பரம் செய்யப்பட்ட நாளுக்கு முன் அதாவது, மே, 27ம் தேதிக்கு முன் பெற்ற தகுதியே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி