முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு நாளை (12.11.13) விசாரணைக்கு வரவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2013

முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு நாளை (12.11.13) விசாரணைக்கு வரவில்லை.

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில், பிவரிசை வினாத்தாளில்40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன. பிழையான
கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து தமிழ்ப்பாடத்துக்குமறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பிசெயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து வழக்கினை ஒத்திவைத்ததுஅவ் வழக்கு .நாளை ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.வழக்கின் அடுத்த கட்ட நிலையை அறிந்துகொள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்வெழுதிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,
நாளை(12.11.13) நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை எனத் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவே வழக்கின் விசாரணை அடுத்தவாரம் தள்ளிப்போகக்கூடும். விசாரணை தேதி நாளை தெரியவரும்.இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் வெளியிடப்படும்.

3 comments:

  1. what happen final list p.g trb sir

    ReplyDelete
    Replies
    1. its authentic news that final list will be released on December only. so we just do our work as usual. its a big shame on trb and chief minister

      Delete
  2. PG Tamil Exam Court date eappo? please detail kidacha sollunga by Senthil Murugan 9865040594

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி