1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்குறியா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2013

1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்குறியா?


தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது. இதில்
மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படவேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் பட்டியல் தயாராக இருந்தும் இது வரை அது வெளியிடப்படாமலே உள்ளது. 3.6.2010-ம் தேதிவெளியிடப்பட்ட அதே அரசாணை எண் 153-ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுதேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு,கடந்த வாரத்தில் அவர்களுக்கு பணி நியமனஆணையும் வழங்கப்பட்டுள்ளது.அதன் பின் மார்ச் 2012-ல் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அதில் தேர்வானவர்களுக்கு அவசர அவசரமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு,ஒரே வாரத்தில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.தற்போது அவர்களுக்குபணி நியமன ஆணை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.9664 இடைநிலைஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப உள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகி உள்ளது.அப்படியானால் ஏற்கனவே காலியாக உள்ள 1743 பணியிடங்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டே நிரப்பப்படும் சூழல் உருவாகி உள்ளது.அப்படியானால், 2011 டிசம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் கதி என்ன.அவ்வாறே இவர்களை (2011 டிசம்பரில் தேர்வானவர்கள்) மீண்டும் பணி நியமனம் செய்யும்பட்சத்தில் பணிமூப்பும் பாதிக்கப்படும்.எனவே அரசு தலையிட்டு, மாநில அளவில் பதிவு மூப்பில் அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும் என கடந்த 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்காககாத்திருப்பவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

1 comment:

  1. ENNA THAN SOLLA VARUGURIRGAL.PLS TELL HOW MANY POST VACANT

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி