சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என சி.பி.எஸ்.இ., நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில்
, 10ம் வகுப்பு பொது தேர்வை 1.75 லட்சம் பேரும் பிளஸ் 2 தேர்வை, 80 ஆயிரம் பேரும் எழுதுவர் என சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஆண்டை விட 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 25 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தேர்வை 10 ஆயிரம் பேரும் கூடுதலாக எழுதுகின்றனர். தமிழகத்தில், சி.பி.எஸ்.இ.,பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, அக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில், 240 பள்ளிகள் இருந்ததாகவும், தற்போது, பள்ளிகளின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சி.பி.எஸ்.இ., அறிவிப்பை தொடர்ந்து, தமிழக தேர்வு துறையும் பொது தேர்வு குறித்தஅறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்பதால் மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி