ஆசிரியர்கள் பற்றாக்குறை: பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2013

ஆசிரியர்கள் பற்றாக்குறை: பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு


திருவாடானை அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிப்பதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம்,
திருவாடானை அருகே, விசும்பூர் கிராம ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 52 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள், பணியில் உள்ளனர். கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி, கிராம மக்கள் பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை.நேற்று காலை, பள்ளி திறந்த உடன், பொதுமக்கள், ஆசிரியர்களை வெளியேற்றி பள்ளியை பூட்டிவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். உதவிக் கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்."பள்ளிக்கு, தற்காலிகமாக, இரு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்; நிரந்தரமாக, இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பின், தற்காலிக ஆசிரியர்கள், மற்ற பள்ளிக்கு செல்வர்" என உறுதியளித்தார். இதையடுத்து, மதியம் பள்ளி திறக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி