டிட்டோ ஜாக் கோரிக்கை 2 ஏன் 7 ஆனது? ஓர் அலசல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2013

டிட்டோ ஜாக் கோரிக்கை 2 ஏன் 7 ஆனது? ஓர் அலசல்.


டிட்டொஜேக் -ன் அனைத்து சங்கங்களும் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய வேண்டி, தனிப்பட்ட இயக்கங்களாக வட்டாரம்,மாவட்டம்,மாநில அளவில் பலவித ஜனநாயக போராட்டம் நடத்தியன.நாளையும் தனிப்பட்ட முறையில் ஓர் இயக்கம்
உண்ணாவிரதம் நடத்துகிறது. அனைத்து சங்க மாநில பொறுப்பாளர்கள் தனிப்பட்ட போராட்ட நிகழ்வுகளுக்கு பிறகு தனது மாநில அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அடிமட்ட தொண்டர்களின் நாடித்துடிப்பை பார்த்தன என்றால் மிகையாகாது!.அடிமட்டத்தில் வட்டார அளவிலான பொறுப்பாளர்கள் அனைவரும் தனிப்பட்ட இயக்கபோராட்டத்தால் வெற்றி இவ்வரசிடமிருந்து கிட்டாது.என்றும் ஒன்றுபட்ட இயக்கப்போராட்டம் தேவை என்பதையே பதிவிட்டார்கள்அடிமட்டப்பொறுப்பாலர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்தே டிட்டோஜேக் கூட்டப்பட்டது. வருவதில் அரை குறை மனதோடு இருந்தவர்களைக்கூட இந்நிகழ்ச்சியே ஒன்றுபடவைத்தது.சங்கங்களுக்குள் இருந்த.தனிப்பட்ட மனஸ்தாபங்களை களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்காகவே தொடக்கக்கல்வித்துறையில் நீண்ட அனுபவமும்,பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்த அனுபவங்களையும்,பல்வேறு கட்டங்களில் அரசின் ஆட்சியாளர்களையும்.அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து அதனால் பெற்ற அனுபவங்களையும் தன்னகத்தே கொண்ட 7 சங்கங்கள் இணைந்து போராட்டகளத்தில் களமிறங்கியுள்ளன.

பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்திய களப்பொறுப்பாளர்கள் அதில் 2800 தர ஊதியமாக பெறுகின்ற இடைநிலை ஆசிரியர்களின் பங்கேற்பை,குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பங்கேற்பை ஆராய்ந்தே.போராட்டக்களத்தில் பங்கேற்கும் பங்கேற்பாலர்களின்“எண்ணிக்கை மட்டுமே ஆட்சியாளர்களின் எண்ணத்தை மாற்றும்” என்ற எண்ணத்தின் அடிப்படையில் அனைத்து நிலை ஆசிரியர்களும் பங்கேற்கு,ம் வண்ணம் கோரிக்கைகள்2 என்பதை 7 ஆக மாற்றி இருக்கலாம்.இடை நிலை நிலை ஆசிரியர்கள் மட்டும் எத்தனைபேர் என ஓர் பார்வையில்2800 தர ஊதியம் பெறும் ஆசிரியர்கள்1.06.2009 க்கு முன்னர் நியமனம் பெற்றவர்களில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ர வர்கள் போக மீதமுள்ளோர்சுமார்-15,000 ஆசிரியர்களே,அதேபோல்1.06.2009 க்கு பிறகு நியமனம் பெற்று தற்போது சென்ற ஆண்டு டெட்ம்முடுத்து நியமனம் பெற்ரவர்கள் வரை பணியாற்ருபவர்கள் சுமார் 30000 ஆசிரியர்களே இந்த எண்ணிக்கை மட்டுமே போதுமா களத்தில் போராடி வெற்ரிபெற இதில் உள்ள 45000 பேர்களும் போராட்டத்தில் பங்கேற்று,1988 ல் நடந்ததைப்போல் தீபாவளி அன்றுஉட்பட சிறையில் தொடர்ந்து 16நாட்கள் இருக்க மனமுவந்து முன் வருவோர் யார் யார்?

அல்லது போராட்டத்தினால் 2003 ல் நடந்ததைப்போன்ரு பணிக்குன் வரவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சுமார் 1லட்சம் பேர் பட்ட கஷ்டத்தை அனுபவிக்க தயாராக வருபவர் எத்தனை பேர்?

மேலும் தேர்தல் விருப்பப்படிவம் போல் அனைத்து சங்கங்களில் உள்ள 2800 தர ஊதியம் பெறும் ஆசிரியர்கள் ”விளைவு என்னவானூலும் நான் வாழ்வா சாவா போரட்டத்தில் பங்கேற்று இறுதி வரை போராடி மாநில முண்ணனி தலைவர்களுக்கு கொள்கை வெல்ல உதவுவேன் ”என உறுதிக்கடிதம் கொடுக்கத்தயார்நிலையில் எத்தனை பேர்?

உள்ளூர் போராட்டம் என்றாலே உணர்வுடன் வராமல்நொண்டி சாக்கு 100 சொல்லும் நமது சொந்தங்கள்(இருபால் ஆசிரியர்கள்தான்)பாதிப்பு இருக்கும் எனத்தெரிந்தும் போராட வரும் மன உறுதியாளர்கள் எத்தனைபேர்?

இப்போதே மேற்கண்ட எண்ணிக்கையில் செனற வருடம் நியமன ம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்,இந்தவருடம் ,அடுத்தவருடம் என ஓய்வு பெற உள்ள ஆசிரியர்கள் கணக்கில் கொள்ல முடியுமா?

இவர்கள் எந்த ஒரு கடுமையான போராட்டத்திலும் (அட ஒரு நாள் அடையாளவேலை நிறுத்தம் தான் ) பங்கேற்பாளர்களா?

இப்ப சொல்லுங்க இதுல வேற இடைநிலை ஆசிரியர்களுக்கென்றே தனியே ஓர் அணியாம்?
உண்மையான இடைநிலை ஆசிரியர்கள் தயவு செய்து டிட்டோஜாக் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல்போராட்டத்தில் கலந்துகொண்டும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களையும் போராட்டத்தில் பங்கேற்க செய்வீர்அதுமட்டுமே போராட்டத்தை வெற்றிகொள்ள உதவும்,நம்பிக்கை வைப்போம் டிட்டோஜேக் மீதுவெற்றி பெறுவோம்ஒருங்கிணைந்து போராடாமல் இத்தருணத்தில் ஏதும் கிட்டாது.”“கிட்டாதாயின் வெட்டென மற” என்று நாமிருப்போம் என்ற ஆட்சி யாஅளர்களின் எண்ணத்தை ஒன்றுபட்டு முறியடிப்போம்.

நன்றி
அன்புடன்
திமலை-ரக்‌ஷித்.கே.பி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி