கடந்த வாரம் புதியதாக அங்கன்வாடி பணியாளர்களாக நியமனம் பெற்றவர்களில்,பலர் கட்டடம் இன்றி,தங்கள் பணியை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர். 400 மக்கள் தொகை உள்ள பகுதியில், ஒரு அங்கன்வாடி மையம்
அமைய வேண்டும், என்ற நோக்கத்திலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 4689 அங்கன்வாடி பணியாளர்கள், 1168 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 5946 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.
கடந்த நவ.11ம் தேதி, அங்கன்வாடி மையங்களில் பணியாளர் நியமிக்கும் பணிகள் தொடங்கின. ஏற்கனவே, உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், புதிய மையங்களுக்கான பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஆனால்,புதிய மையங்களுக்கான கட்டடம் உள்ளிட்ட எந்த வசதியும், செய்து தரப்படவில்லை.பழைய முறையில் தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதிதாக பணி நியமன ஆணை பெற்ற பணியாளர்கள், தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதியில், வாடகைக்கு கட்டடம் பிடித்து, மையத்தை உருவாக்க கூறப்பட்டுள்ளது.நகர்புறங்களில், கட்டட வாடகையாக ரூ.400ம், கிராமப்புறங்களில் ரூ.300-ம் இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில், அங்கன்வாடி மையம் அமைக்க, இந்த குறைந்த வாடகையில் யாரும் இடம் தர முன்வரவில்லை. இதனால், புதிதாக பணியில்சேர்ந்தவர்கள், வாடகைக்கு கட்டடத்தை தேடி கடந்த ஒரு வாரமாக, அலைந்து கொண்டிருக்கின்றனர். சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில், ஏற்கனவே 12 மையங்கள், சொந்த மற்றும் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.தற்போது பணியாளர் நியமிக்கப்பட்ட பின் இதன் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.ஆனால், 7 பேருக்கு கட்டட வசதி இல்லை.
காரைக்குடியை ஒட்டிய நகர் பகுதி என்பதால், அங்கன்வாடி மையம் அமைக்கும் கட்டட வாடகையாக, ரூ.5 ஆயிரம் வரை கேட்கின்றனர். வாங்கும் சம்பளத்தை வாடகையாக செலுத்த வேண்டிய அவலத்தில் உள்ளதாகஅவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி