சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் மொட்டை அடிக்கும் போராட்டத்தில்200ஆசிரியர்கள் கலந்துகொள்வது என்று திண்டுக்கல் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூட்டம்
மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களின் ஊதியத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற7–ந் தேதி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மொட்டை அடிக்கும் போராட்டம் நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளையின் போராட்ட ஆயத்த கூட்டம் சின்னாளபட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோமை பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தா,மாவட்ட பொருளாளர் அறிவழகன்,அமைப்பு செயலாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
200பேர் கலந்துகொள்வதுதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்,கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி,தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அடுத்த மாதம்(டிசம்பர்)7–ந் தேதி சென்னையில்5ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடிக்கும் போராட்டமும்,பேரணியும் நடக்கிறது. இந்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து200முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வது.மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆசிரியர்கள் கழக மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ்,பாண்டியன்,இணைச் செயலாளர் செல்வராஜ்,கல்வி மாவட்ட செயலர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாதவன்,வெற்றிவேல்,சிவசுப்பிரமணியன்,மகேந்திரன் உள்பட முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி