சிறப்பு வகுப்புகள் எடுக்க, ரூ.2,500 சம்பளத்தில் ஒவ்வொருபள்ளியிலும், ஒரு ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது- பரிதவிப்பில் பட்டதாரிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2013

சிறப்பு வகுப்புகள் எடுக்க, ரூ.2,500 சம்பளத்தில் ஒவ்வொருபள்ளியிலும், ஒரு ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது- பரிதவிப்பில் பட்டதாரிகள்.


கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு" என்ற மோகம் குறையவில்லை என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு,3 மாதங்களுக்கு நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் சாட்சியாக உள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், 9ம் வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், வாசிக்க மற்றும் எழுத தெரியாத மாணவர்களுக்கு,மாலை நேரத்தில், சிறப்பு வகுப்புகள் எடுக்க, ரூ.2,500 சம்பளத்தில் ஒவ்வொருபள்ளியிலும், ஒரு ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் வரும் பிப்ரவரி வரை 3 மாதமே பணி செய்ய வேண்டும். தினமும் மாலை 5.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில், பகல் 12.30 மணி வரையிலும், பள்ளியில் இருக்க வேண்டும். இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரி ஒருவரை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நியமிக்கலாம்.இதற்கான நியமனத்தை, இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கும், பலமான "சிபாரிசு" தேடி பலர் அலைகின்றனர். பல பள்ளிகளில், சிபாரிசு கடிதங்களுடன் 50 பேர் விண்ணப்பித்துள்ளதால், தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:

3மாதங்கள் என்றாலும், அரசு சம்பளம் என்பதால், இதற்கு அரசியல்வாதிகள் உட்பட பலரிடம் "சிபாரிசு" கடிதம் பெற்று வருகின்றனர். பட்டப்படிப்பு முடித்தவரை தான்ஆசிரியராக நியமிக்கின்றனர்.இவர்களுக்கு, குறைந்தது ரூ.5 ஆயிரம் சம்பளம் நிர்ணயித்தால், அப்பணிக்கு என ஒரு"கவுரவம்" இருக்கும் என்றார்.

1 comment:

  1. teacher training,b.ed,dgree padithavargal pitchai edunga nu sollama solluranga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி