கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-2 கேள்வித் தாள்களை விற்பனைசெய்த, வருமான வரித்துறை அதிகாரியை, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வு ஆணையம் சார்பில், கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வுநடத்தப்பட்டது. இந்த தேர்வுக்குரிய கேள்வித்தாள்கள், தர்மபுரி, ஈரோடு பகுதிகளில் வெளியானது. இதனால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்தராவ் உட்பட 40 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் மகனும், வருமானவரித்துறை அதிகாரியுமான ஞானசேகரன், 31, ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த ஞானசேகரன் தலைமறைவானார். நான்கு நாட்களுக்கு முன், அவர், சென்னை சென்ட்ரல் பகுதியில், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த போது, கோவையில் இருந்து வந்திருந்த, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலானாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.கடந்த, 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, போலீஸ் வேலையில் ஞானசேகரன் சேர்ந்துள்ளார். கடலோர காவல் படை ஐ.ஜி., அலுவலகத்திலும் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பணியில் திருப்தியடையாத ஞானசேகரன், குரூப் 1 தேர்வு எழுதி, வருமான வரித்துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.குரூப் 2 தேர்வு எழுதிய போது தான், ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்தராவ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ரகசியமாக கேள்வித்தாள்களை வெளியாக்கி லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக மேலும் பலரை, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி