ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆக. 17, 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடந்தது. இதில் சுமார் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான
முடிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
இடைநிலை ஆசிரியர் பிரிவில் மாநில அளவில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சத்யா (25) இரண்டாம் இடம் பெற்றுள்ளார். கணவர் ராமசாமியுடன் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பகுதியில் வசிக்கும் சத்யா கூறியதாவது:
பிஎஸ்சி படித்துள்ள நான் ஆசிரியர் பணி மீதுள்ள ஆர்வத்தால் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். கடந்த இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தோல்வியை தழுவினேன். இருப்பினும் நம்பிக்கையுடன் 3வது முறை எழுதி 150க்கு 122மதிப்பெண் பெற்றுள்ளேன். பாடங்களை புத்தகத்தில் நேரடியாக படிப்பதைவிட அதில் உள்ள முக்கிய வரிகளை குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வேன். கடைசி நேரத்தில் அதை மட்டும் நன்கு படித்தால் மனதில் தங்கிவிடும்.எதிர்மறை சிந்தனையின்றி நம்மாலும் முடியும் என்று உத்வேகத்துடன் முயற்சித்தேன். வழக்கமான வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்து விட்டு, கிடைக்கும் நேரத்தில் ஆழ்ந்து படித்தேன். படித்ததுடன் கோச்சிங் சென்டருக்கும் சென்று பயிற்சி பெற்றேன். இதுவே எனது வெற்றிக்கு வழிவகுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
next year tet exam eppo ?
ReplyDelete150 eduthalum seniority la velai...
ReplyDelete